• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாட்டு வண்டில்களில் பாடசாலை செல்லும் மாணவர்கள்

Jun 9, 2022

இலங்கையில் நிலவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு மாட்டு வண்டில்களில் செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

அந்தவகையில், களுத்துறை மாவட்டத்தில் பிரதேசமொன்றில் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு மாட்டு வண்டில்களை பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.
 
இலங்கை தற்போது எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியின் ஆழத்தை விளக்கும் இந்தக் காட்சிகள் இன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதுடன்,பாடசாலைப் பயணங்களையும், அன்றாடப் பயணங்களையும் வழமைப்போல் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed