பிரித்தானியாவில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை தினசரி உயர்வை பதிவுசெய்துள்ளது.
இதனால் சாதாரண குடும்பம் ஒன்றின் சராசரி மாதாந்த வாகன எரிபொருள் செலவு 100 பவுண்சை தாண்டியுள்ளது.
உக்ரைனிய போரால் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய நாடுகள் குறைத்ததால் இந்த விலையேற்றம் அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் உணவு மற்றும் எரிசக்தி கட்டணங்கள் அதிகரித்து வருவதால், பல குடும்பங்கள் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.