• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் மாணவியின் மரணம் கொலையா? தற்கோலையா? தொடரும் விசாரணை

Juni 1, 2022

வவுனியா, நெளுங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது தொடர்பில் வெளிப்படுத்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.  

இந்நிலையில் அது குறித்து தெளிவாக வெளிப்படுத்திக்கொள்ள  வவுனியா  வைத்தியசாலையில் இன்று (1) மாணவியின் சடலம் மீது பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

பிரேதபரிசோதனை முடிவுகளின் படி  அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை ஊகிக்க முடியுமானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இதுவரை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில்,  மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவி அவரது  தோழர்களுடன் வீடு நோக்கி வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் சிறு காட்டுப் பகுதியில் மாணவியின் புத்தகங்கள், காலணி என்பன மீட்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் அதனை அண்மித்த பகுதியில் கிணற்றிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பொலிஸார் சிறப்பு விசாரணைகளை நடாத்துவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed