• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நல்லூர் கந்தன் பெருவிழா ஓகஸ்ட் 2 கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Mai 30, 2022

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகரசபையினருக்கு ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன.

நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (திங்கட்கிழமை) பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தின்போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகரசபை வளாகத்தில் வாழை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed