• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

Mai 30, 2022

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி ரயிலுடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை உள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தமக்கு பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed