• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உணவுப் பொட்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விலங்கின் தலை.

Mai 25, 2022

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள பொன்ஷோல் தெருவில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து  வாங்கிய  உணவுப் பொட்டலத்தில் விலங்கின் தலையுடன் கூடிய எலி போன்ற பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விலங்கைத் துடைத்து சுத்தம் செய்து உணவுப் பொட்டலத்தில் உணவுக்காகச் சேர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (24) காலை கொழும்பு கோட்டை பொலிஸில் முறைப்பாட்டாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படிஇ சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனிக்கு கோட்டை பொலிசார் செய்த  அறிக்கையின்  பிரகாரம், பிரதான உணவு பரிசோதகர் அடங்கிய குழுவொன்று விடுதிக்கு விஜயம் செய்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரியிடம் வினவிய போது, ​​குறித்த உணவுப் பொதியின் மாதிரிகள் எடுக்கப்பட்டு இடத்திலுள்ள பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த விலங்கு எலி அல்ல முயல் என்று கூறியதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed