• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குரங்கம்மை அச்சம் பெல்ஜியம் அதிரடி உத்தரவு!

Mai 24, 2022

கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடாத நிலையில் தற்போது கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை உலநாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரங்கம்மை தொற்று பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் மிகப்பெரிய அளவில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் குரங்கு காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் 3 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை உலகில் முதல் முறையாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திய நாடு பெல்ஜியம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed