• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் விபத்து.

Mai 23, 2022

சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறை நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்திலேயே இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், காவல் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான், வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed