• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

Mai 22, 2022

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன், அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் இன்று காலை மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியூடாக நடந்து சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த வீதியூடாக அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை மோதியதோடு, அச்சிறுவன் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.உடனடியாக குறித்த சிறுவன் அப்பகுதியில் சென்றவர்களால் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞன் அவ்விடத்திலிருந்து சென்ற நிலையில், தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிய வருகின்றது.

குறித்த சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த விபத்து தொடர்பாகவும், விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராகவும், பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed