• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி!

Mai 22, 2022

சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு நாட்டின் முதல் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று அறிவித்தனர்.

அந்த நபர் வெளிநாட்டில் இருந்தபோது குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு தானாக சிகிச்சைக்கு வந்த அந்த நோயாளிக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இப்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெர்னின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed