• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். கல்வியங்காடு பகுதியில் தங்கநகை திருட்டு

Mai 14, 2022

யாழ். கல்வியங்காடு – கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த வயோதிபப் பெண்ணின் இரண்டு பவுண் தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் யன்னலை திறந்து உள்ளே நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்து வயோதிபப் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed