• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவை தொடர்ந்து மட்டக்களப்பிலும் பெரும் சோகம்

Mai 12, 2022

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

காளி கோயில் வீதி கதிரவெளியைச் சேர்ந்த ஜீவானந்தம் விமல்ராஜ் (வயது 22) வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த புலேந்திரன் அனுஷ்காந் (வயது 23), புதூர் கதிரவெளியைச் சேர்ந்த தங்கவேல் சஜிதன் (வயது 26) ஆகிய மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கதிரவெளி கடலில் குளிப்பதற்கு நான்கு இளைஞர்கள் சென்ற நிலையில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு இளைஞர் நீந்திக் கரை சேர்ந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

உயிரிழந்த இளைஞர்களின் சடலம் கதிரவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    அதேவேளை நேற்றையதினம் முல்லைத்தீவில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த  மூன்று இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் இன்று மட்டக்கள்ப்பிலும் மூவர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed