• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கேரளாவில் சிறுவர்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல்!

Mai 9, 2022

கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கேரளாவில் 5 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு அதீத காய்ச்சலுடன் உடலில் சிறிய தடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தடிப்புகள் சிவப்பு நிறத்தில் இருப்பதால், இந்தக் காய்ச்சல் தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. இதுவரை தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் 82 போ் அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காய்ச்சல் தனி தீநுண்மியினால் ஏற்படுகிறதா அல்லது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலின் பக்கவிளைவு காரணமாக ஏற்படுகிறதா என்பது தொடா்பாக மருத்துவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

அதே வேளையில், தக்காளி காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிகுறிகளும் முன்னெச்சரிக்கைகளும்: இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு அதீத காய்ச்சல், உடல் வலி, சோா்வு ஆகியவற்றுடன் உடலில் தடிப்புகளும் தோன்றும்; வாயில் எரிச்சல், கைகள், முழங்கால்களில் நிறமாற்றம் உள்ளிட்டவையும் ஏற்படும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed