• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சியில் சாராயகடையில் சண்டை! ஒருவர் உயிரழப்பு

Mai 3, 2022

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுசாலையில் மது அருந்தியதாக கருதப்படும் இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாச்சிமார் கோவிலடி, திக்கம் என்ற முகவரியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது 25) என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாகவும் உடைந்த போத்தில் உட்பட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் சிலர் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை,

சம்பவம் நடைபெற்ற விருந்தினர் விடுதிக்கு சென்ற நெல்லியடிப் பொலிஸார் குறித்த விடுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed