• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பண்டத்தரிப்பில் வீடு தீ பற்றியதில் உயிரிழந்த பாடசாலை மாணவி.

Mai 2, 2022

யாழ் பண்டத்தரிப்பில் வீடு தீ பற்றியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை வீசியபோது, அங்கு இருந்த பெற்றோல் கானில் பட்டதால் தீ பரவியுள்ளது.

இத் தீ விபத்தில் மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பதால் தீ விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed