நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என தகவகள் தெரிவிக்கின்றன .
இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை மட்டுப்படுத்துகின்றன என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .
கடந்த 3 – 6 மாதங்களில் சரக்கு மற்றும் பயணிகள் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளது என்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கை வங்கிகள் மூலம் வெளிநாட்டு நாணயத்தில் பணம் அனுப்ப முடியாமல் போனதன் விளைவுகள் இவை எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது