• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அற்புத மருத்துவகுணங்கள் நிறைந்த மல்லிகை பூ

Apr. 30, 2022

அடிப்பட்ட வீக்கம், புண் போன்றவற்றிற்கு மல்லிகை பூவை அரைத்து பூசி வந்தால் விரைவில் குணமாகிவிடும்.

மல்லிகை பூவை கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தை சொறி, சிரங்கு, கொப்பளங்கள் போன்றவற்றின் மீது தடவி வரும்போது மேற்கூறிய தோல் தொடர்பான நோய்கள் குறைய ஆரம்பிக்கும்.

மல்லிகை பூவை கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்துவர சிறுநீரகப் பிரச்னை, வயிற்று கோளாறுகளை சரிசெய்ய உதவும். அஜீரணப் பிரச்னைகள் இருக்காது. வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் அதை அழித்துவிடும்.

தலைமுடி வளர்ச்சிக்கு மல்லிகை பூக்கள் சிறந்த பயன்களை தரக்கூடியது. மல்லிகை பூக்கள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை தேங்காய் என்ணெய்யில் இட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலையில் ஏற்படும் பொடுகுப் பிரச்சனை, தலைமுடி வறட்சி நீங்கும்.

மல்லிகை பூக்களின் வாசனைக்கு, மன அழுத்தம், கோபம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது. மல்லிகை பூக்களுக்கு உடற் சூட்டை குறைக்கும் தன்மை உள்லதால்தான், பெண்களால் தலைமுடியில் வைத்து பயன்படுத்தப்படுகிறது.

மல்லிகைப் பூவை நிழலில் காய வைத்து அதை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகக் கல் கரையும். அதோடு நீர் சுருக்கு, சிறுநீர் பாதையில் எரிச்சல் இருந்தாலும் குணமாகும்.

மல்லிகை பூ கஷாயம் அருந்தி வந்தால், கன் நரம்புகளுக்கு ஊட்டமளித்து கண் பார்வை திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed