• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குழந்தை ஒன்றின் உயிரை பறித்த ஜம்புப்பழம்.

Apr. 24, 2022

தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி 8 வயது குழந்தையொன்று இன்று உயிரிழந்துள்ளதாக வாரியபொல வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தெனுரி கேஷலா இதுரங்கொட என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய மகளான தெனுரி  வாரியபொல ஹம்மாலிய பிரதேசத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குழந்தை பழத்தினை சாப்பிட்டு விட்டு விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுமியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed