• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மாணவி ஒருவரின் சடலம் மீட்பு!

Apr. 23, 2022

யாழ்ப்பாணம்- கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed