• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளிநாட்டவர்களைக் கண்டு பயப்படும் சுவிஸ் நாட்டவர்கள்: ஒரு செய்தி

Apr. 20, 2022

வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை தருவதற்கு சுவிட்சர்லாந்து மறுத்து வருவதற்குக் காரணம், பயம் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் நான்கில் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆனால், சுவிட்சர்லாந்தோ அதைக் குறித்துக் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் நான்கில் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆனால், சுவிட்சர்லாந்தோ அதைக் குறித்துக் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, சுவிஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகிதம். மற்ற நாட்டவர்கள் அவர்களை சுவிஸ் நாட்டவர்கள் என கருதுகிறார்கள், ஆனால், சுவிட்சர்லாந்திலோ அவர்கள் வெளிநாட்டவர்களாக கருதப்படுகிறார்கள்.

உண்மை என்னவென்றால், இந்த வெளிநாட்டவர்கள் என அழைக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்குப் பிறந்தவர்கள் ஆவர். அதாவது அவர்கள் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள்.

பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்திற்கும் குறைவுதான். சுவிட்சர்லாந்திலோ, குறிப்பிடத்தக்க அளவில் புலம்பெயர்தல் காணப்படுகிறது. ஆனாலும், சுவிட்சர்லாந்தின் கடுமையான குடியுரிமை வழங்கும் கொள்கை, வெளிநாட்டவர்களை இன்னமும் வெளிநாட்டவர்களாகவே வைத்துள்ளது.

Neuchâtel மற்றும் Jura ஆகிய சுவிஸ் மாகாணங்கள் வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளன. அதுவும் அந்த மாகாணங்கள் அனைத்தும் பெரடல் மட்டத்தில் வாக்களிக்க வெளிநாட்டவர்களை அனுமதிப்பதில்லை. மேலும், அவை வெளிநாட்டவர்களை தேர்தலில் நிற்கவும் அனுமதிப்பதில்லை

வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களாகவே நீடிப்பதற்கான முக்கிய காரணம், அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள்.

சுவிஸ் அரசைப் பொருத்தவரை, வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குறித்த தன் கொள்கையில் அது தெளிவாக உள்ளது.

சுவிஸ் மக்களுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைந்து வாழும், மற்றும் சுவிட்சர்லாந்தில் உள் மற்றும் வெளி பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தாதவர்களுக்கு மட்டுமே சுவிஸ் குடியுரிமை வழங்கப்படும் என்கிறது அது.

ஆக, குடியுரிமை கோருவதற்கு இப்படி ஒரு சிறுமைப்படுத்தும் வகையிலான வரையறை கொடுக்கப்பட்டிருப்பதால், நல்ல, திறமையுடைய வெளிநாட்டவர்கள் கூட குடியுரிமை கோர யோசிக்கிறார்கள்.

சுவிஸ் அரசியல்வாதிகளும், சுவிஸ் வாக்காளர்களும் வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான தடைகளை பெரியதாக்கி வைத்திருக்கிறார்கள்.

அது ஏன்?

ஏனென்றால், தங்கள் சமுதாயத்தில், அதாவது வெளிநாட்டவர்களுடன் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் சுவிஸ் சமுதாயத்தில், தங்கள் நாடு எப்படி நிர்வகிக்கப்படவேண்டும் என்பது குறித்து வெளிநாட்டவர்கள் கருத்துக்கள் தெரிவிப்பதைக் குறித்து சுவிஸ் நாட்டவர்கள் பயப்படுகிறார்கள்.

ஆக, தங்கள் நாட்டைக் குறித்து முடிவுகள் எடுக்கும் விடயங்களில் வெளிநாட்டவர்களும் பங்கு வகித்துவிடுவார்களோ என சுவிஸ் நாட்டவர்களுக்கு பயம் இருக்கும் வரை, எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்கிறார் Clare O’Dea.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed