• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீர்வேலிக் கந்தசுவாமி தேர்த்திருவிழாவில் அனைவரதும் கவனத்தை ஈர்த்த இளைஞன்

Apr. 19, 2022

நீர்வேலிக் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(15.4.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது 29 வயதான நீர்வேலியைச் சேர்ந்த ஜீ.சிந்துஜன் என்ற இளைஞன் தனது உடல் முழுவதும் 100 வரையான முள்ளுகள் குத்திப் பறவைக் காவடி எடுத்துள்ளார்.

இவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து நீர்வேலிக் கந்தசுவாமி ஆலயம் வரை கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் மேற்படி இளைஞர் இவ்வாறு பறவைக் காவடி எடுத்துத் தனது நேர்த்திக் கடனை நிறைவு செய்துள்ளார். குறித்த காட்சி ஆலயத்தில் கூடியிருந்த அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் மெய்சிலிர்க்கவும் வைத்துள்ளது.

இதேவேளை, மேற்படி இளைஞர் நீர்வேலிக் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆறாவது தடவையாகப் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளதாகத் தெரியவருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed