• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் மஹோற்சவம் ஆரம்பம்

Apr. 17, 2022

தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(17.4.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் நடைபெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை வேட்டைத் திருவிழாவும் இரவு-7 மணிக்குச் சப்பைரத உற்சவமும், 25 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-9.30 மணிக்கு தேர்த் திருவிழாவும், மறுநாள் செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-6 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

இதேவேளை, காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் காலை உற்சவம் காலை-08.30 மணிக்கும் மாலை உற்சவம் மாலை-05 மணிக்கும் ஆரம்பமாகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed