மீண்டும் யாழ்.குடாநாட்டிற்குள் யானைகள் புகுந்தமையினையடுத்து பரபரப்பு தொற்றியுள்ளது.ஆனையிறவைக் கடந்து இயக்கச்சியில் யானைகள் குறைந்தது .மூன்று யானைகள் வந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனையிறவு – தட்டுவன்கொட்டியினையண்டிய பகுதியில் நின்றதாகத்தகவல்கள் வெளிவந்திருந்தன. பின்னர் கொம்படிக்களப்பின் வழியாக சங்கத்தார் வயல் பகுதியை வந்தடைந்து பின்னராக இயக்கச்சிக்குள் நுழைந்துள்ளன.
கடந்த சில வருடங்களிற்கும் முன்னரும் வடமராட்சிகிழக்கில் யானைகள் நடமாடியதுடன் அங்கு பொதுமகன் ஒருவரையும் தாக்கி கொன்றிருந்தன.
இதனிடையே உப்பிற்காக ஆனையிறவை நோக்கி வந்திருந்த யானைகளே தற்பேர் இயக்கச்சி வரை வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.