• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவைச் சேர்ந்த மூவரைக் காணவில்லை!

Apr. 12, 2022

நுவரெலியா – றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவிலிருந்து சுற்றுலாசென்ற 7 பேர் கொண்ட குழுவினர் றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன், ஏனைய நால்வரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு காணாமல்போனவர்களில் 2 பெண்களும் ஆணொருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed