தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மடக்கும்புற தோட்டத்தின் வடக்கி மலை பிரிவில் மூதாட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. மடக்கும்புற தோட்ட பிரிவில் வசித்து வந்த 84 வயதுடைய மூதாட்டி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டி அணிந்திருந்த காதணிகளை களவாடி செல்வதற்காக அவரின் கைகளும் வாயும் துணியால் கட்டிய நிலையில் கழுத்து நசுக்கப்பட்டு காது அறுக்கப்பட்ட நிலையில் கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
மூதாட்டியின் மகன் ஒருவர் அவரை பார்வையிட வீட்டிற்கு சென்றபோது அவர் இறந்து கிடந்ததாகவும் பின்னர் சம்பவம் தொடர்பான தகவலை தலவாக்கலை போலீசாருக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.