யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கான எரிபொருளை(டீசல்) பெற்றுக் கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை(04.4.2022) வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மேற்படி பகுதியில் பலாலி வீதியில் மிக நீண்ட வரிசையில் பல மணிநேரமாக காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிந்தது.
காலை முதல் மிக நீண்ட வரிசை குறித்த பகுதியில் காணப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.