• Mo. Nov 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

எல்லைகளில் குவியும் ரஷ்ய படைகள்: மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் புடின்!

Apr 2, 2022

ரஷ்யாவின் மேற்கு எல்லை பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், நான்கு கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் இதுவரை நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் போரை நிறுத்துவது குறித்த எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படாததால் பொருளாதாரம் மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் குழம்பி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை) ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸின் செய்தி நிறுவனத்திடம் ரஷ்ய செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்த தகவலில், ரஷ்யா மேற்கு நாடுகளின் எல்லை பகுதிகளில் தங்களின் ராணுவ பலத்தை அதிகரிக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த முடிவானது, எந்தவொரு நாட்டிற்கும் ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று எழுகிற எண்ணத்தை தடுத்து நிறுத்தும் என தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed