உயர்தர மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.
பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13.03.2022).மாலை 04.30மணியவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பொகவந்தலாவ செல்வகந்தை…
மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்!
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பீதியடைந்த மக்கள் உடனடியாக…
47 ஆண்டுகளின் பின்னர் முல்லைத்தீவில் சாதனை படைத்த பாடசாலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பனிக்கன் குளம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் 2021 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையில் தவசீலன் புவணாயினி 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். மாங்குளம் – பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையில் 1975…
யாழில் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான அறிவிப்பு!
யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(14) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், யாழ் போதனா வைத்தியசாலையில்…
வேலணையில் தாய் மகள் மீது கத்திக்குத்து
தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற சம்பவம் யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப பெண் மற்றும்…
வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
2021ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம். 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை…
ஜேர்மனியில் ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வரும் கொரோனா விதி
ஜேர்மனியில் கல்வி அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றில், பள்ளிகளில் மாணவமாணவிகள் மாஸ்க் அணிவதையும், ஒரே நேரத்தில் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்வதையும் முடிவுக்குக் கொண்டுவருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏப்ரல் 2 முதல் பள்ளிகளில் மாணவமாணவிகள் மாஸ்க் அணியவேண்டியதில்லை. அத்துடன், பள்ளிகளில்,…
காங்கோ நாட்டில் சரக்கு தொடருந்து தடம் புரண்டு 60 பேர் உயிரிழப்பு !
சரக்கு ரெயிலில் சட்ட விரோதமாக பயணம் செய்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், போதிய பயணிகள் தொடருந்து சேவை இல்லாமல் மக்கள் சரக்கு தொடருந்துகளில் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் லூயன் மாகாணத்தில் இருந்து…
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு இணையவழி ஊடாக
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பான பாடங்களுக்குரிய பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்பிக்கவேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022.03.10 ஆம் திகதி முதல் 2022.03.18 ஆம்…
நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் விபத்து.
யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் மின்கம்பத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் இந்த சம்பவத்தில் சாரதிக்கு காயம் ஏற்படவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறியியலாளர் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் குறித்த பொறியியலாளர்…
சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 4ஆம் திருவிழா(11.03.2020)
சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.03.2022 எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் உபயம் திருமதி.நவரத்தினராசா பரமேஸ்வரிகுடும்பம் .