• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டனில் பட்டப்பகலில் நடந்த சம்பவம்!

März 29, 2022

லண்டனில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பட்டப்பகலில் (28-03-2022) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

படுகாயமடைந்த இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன் சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. தகவல்கள் தெரிந்தவர்கள் 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed