• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூமியை தாக்க வரும் சூரிய புயல்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Mrz 29, 2022

சூரியனில் ஏற்பட்டுள்ள வெப்ப பேரலையால் விரைவில் பூமியை சூரிய புயல் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எரியும் நட்சத்திரமான சூரியனுக்கு அருகே மூன்றாவது கோளாக பூமி அமைந்துள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி சூரிய புயல் உருவாகிறது. இவ்வகை சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக சூரிய புயல்களால் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.

இந்நிலையில் தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள வெப்ப பேரலையால் புதிய சூரிய புயல் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த புயல் பூமியை தாக்குவதால் இண்டர்நெட், ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed