கொரோனா கட்டுப்பாடுகள் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை வரை, 2022 ஏப்ரலில் பல மாற்றங்கள் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கின்றன.
அவை குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்…
மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்
ஏப்ரல் 1 முதல், சுவிட்சர்லாந்தில் மீதமிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட இருப்பதாக (எதிர்பார்த்தபடி, பெருந்தொற்றுச் சூழலில் முன்னேற்றம் காணப்படும் நிலையில்) பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், பொதுப்போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகள் முதலான இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிதல் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டால் ஐந்து நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் ஆகிய கட்டுப்பாடுகளும் ஏப்ரல் 1ஆம் திகதி முடிவுக்கு வர உள்ளன.
மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்களுக்கு புதிய கட்டுப்பாடு (E-bikes)
ஏப்ரல் 1 முதல் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், இரவில் மட்டுமின்றி, பகலிலும் தங்கள் விளக்குகளை எரியவிட்டபடித்தான் இயங்கவேண்டும்.
உங்கள் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்களில் விளக்கு எரியவில்லை, அல்லது விளக்கே இல்லை என்றால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
சுவிஸ் கொரோனா ஆப் செயலிழக்கும்
ஏப்ரல் 1 முதல், சுவிஸ் கொரோனா ஆப் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோரில் இருந்து மறைந்துவிடும் என பெடரல் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
2022/2023 குளிர்காலங்களில் கொரோனா நிலைமை எப்படி உள்ளது என்பதைப் பொருத்து, சுவிஸ் கொரோனா ஆப் மீண்டும் இயங்கலாம்.
Oxo வகை பிளாஸ்டிக்குக்கு தடை
மட்காத வகை பிளாஸ்டிக்கான Oxo வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் தடைவிதிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் உயரமான பல இடங்களில் பெரும்பாலான பனிச்சறுக்கு லிஃப்டுகள் மே மாதம் வரை கூட இயங்கினாலும், சில இடங்களில் ஏப்ரலுடன் மூடப்பட உள்ளன.
வரி செலுத்தும் நேரம்
மார்ச் 31 பெரும்பாலானோருக்கு வருமான வரி தாக்கல் செய்யும் நேரம்.
ஆகவே, வருமான வரி தாக்கல் செய்யாதோர் உடனடியாக அந்த வேலையை கவனிப்பது நல்லது!