• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

März 28, 2022

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் நாடளாவிய ரீதியில் 7 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 06.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான பிரிவுகளில் காலை 08.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை 5 மணி நேரமும் மாலை 06.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed