பிரான்ஸில் குறைந்த முதல் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகளுடன் தொடர்புடைய வாழ்க்கைச் செலவுகளின் அதிகரப்பு காரணமாக இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 1.8 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைகள் இல்லாத ஒரு தனி நபர்கொண்ட குடும்பங்கள் தற்போது 553.71 யூரோவுக்கு பதிலாக மாதத்திற்கு 563.68 யூரோவை கோர முடியும் என கூறப்படுகின்றது. ஒரு குழந்தை கொண்ட குடும்பத்திற்கு 845.52 யூரோவைப் பெற முடியும்.
இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு 1,014.62 யூரோவை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு மிகப்பெரிய அதிகரிப்பாகவே பார்க்கப்படுகின்றது.
அதேசமயம் கடந்த வருடம் 0.1 வீதமான அதிகரிப்பு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த கொடுப்பனவு மாணவர்கள் அல்லது வேலையில் இருப்பவர்களை இலக்காகக் கொண்டதாகும்.
சம்பளம் குறைவாகவோ அல்லது நடுத்தரமாகவோ உள்ளவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
குறித்த கொடுப்பனவு ஒரு வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, அந்த குடும்பத்தை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறதாகௌம் கூறப்படுகின்றது.
அதேசமயம் ஒரு குடும்பத்தின் வருமானம் பிரான்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட 1.5 மடங்கு குறைவாக இருக்கும் போது போனஸ் வழங்கப்படுகிறது.
அதேவேளை பிரான்ஸில் இந்த கொடுப்பனவுக்கு தகுதியானவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் அதைக் கோரவில்லை என்று அரசாங்கத்தின் சமூக-பொருளாதாரப் புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.