• So.. Apr. 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

எழுதுமட்டுவாழ் பகுதியில் கார் சில்லுக்குள் சிக்கிய குழந்தை!

März 25, 2022

 யாழில் தந்தை பின்நோக்கி செலுத்திய காரின் சக்கரத்திற்குள் சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று கிளாலி – எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. வீட்டிலிருந்து காரை வெளியே கொண்டு செல்வதற்காக தந்தை பின்புறம் நகர்த்தியபோது, பின்புறம் நின்றிருந்த குழந்தை சக்கரத்திற்குள் சிக்கியுள்ளது.

இதில் காயமடைந்த குழந்தை சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed