• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழர் பகுதியில் இடம்பெற்ற வியக்க வைத்த திருமணம்!

März 24, 2022

தமிழர்களின் பண்டைய முறையிலான திருமணம் ஒன்று நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணம்  போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியிலேயே நடைபெற்றுள்ளது.

நெற் கற்றைகளினால் சோடனை செய்யப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும் மணமகளும் ஆலயத்திற்க அழைத்துச்செல்லப்பட்டு திருமணம்  நடைபெற்றது.

அத்துடன்  மணமக்களின் வீடும் நெற்கற்றைகளினால் சோடனை செய்யப்பட்டிருந்ததுடன் நிகழ்வுகள் பாரம்பரியங்களை பேணியதாக நடைபெற்றது.

அதேவேளை தற்போதைய காலத்தில் தமிழர்களின் பண்டைய பாரம்பரியங்கள் மறக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அவற்றினை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திருமணத்தை நடத்தியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழர்களின்  பண்டைய கால வழக்கத்தில்  இடம்பெற்ற இத்திருமணம் பலருக்கும் வியப்பை அழித்த நிலையில், மணமக்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

Gallery
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed