• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் கொடிகாமத்தில் முச்சக்கர வண்டி விபத்து – சாரதி படுகாயம்!

Mrz 23, 2022

யாழ்.கொடிகாமம் பகுதியில் முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கண்டி  நெடுஞ்சாலையில், கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி வாகனம் மோதியுள்ளது. என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed