• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Mrz 21, 2022

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் வேன் ஒன்றுக்குள் இருந்து மக்களிடம் வித்தியாசமான முறையில் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாரிஸ் நகரியில் பெரும்பாலும் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருவது குறிப்பிட்டத்தக்கது. 

பணம் வழங்கும் இயந்திரம் ஒன்றில் இருந்து நூதனமான முறையில் 240,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வால்டி மாறன் மாவட்டத்திற்குட்பட்ட லெய் லே றோஸ் (LHaÿ-les-Roses) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணம் வழங்கும் இயந்திர (distributeurs de billets) நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை மூன்று கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியுள்ளனர். அவரை கட்டாயப்படுத்தி அவரது இடுப்பில் வெடிகுண்டு நிறைந்த இடுப்புப்பட்டி ஒன்றை அணிவித்துள்ளனர்.

பின்னர் பண இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து தருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அதையடுத்து, குறித்த ஊழியரை கிறெம்லின் பிஸெத்ர் (Kremlin-Bicêtre) பகுதியில் உள்ள பண இயந்திரத்தில் இருந்து €240,000 யூரோக்கள் பணத்தினை எடுக்கச் செய்துள்ளனர்.

பின்னர் 11 மணி அளவில் ஊழியரின் இடுப்பில் இருந்த பட்டியை அகற்றிவிட்டு, அவரை விடுவித்தனர். பணத்தை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

இந்த கும்பல் இவ்வாறான முறையில் ஏற்கனவே பல இடங்களில் நூதனமான முறையில் கொள்ளையிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed