• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அன்னாசி பழத்தின் அற்புதமான மருத்துவ நன்மைகள்

März 21, 2022

ரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.

அன்னாசியில் வைட்டமின்-சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். உடல் காயங்களும் வெகு விரைவில் ஆறும். அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.

இதில் நிறைய நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதனால் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது. அதே சமயம் நார்ச்சத்துகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கக் கூடியவை என்பதால், உடல் எடையை குறைக்க முடியும்.

ரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.

அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின்-ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின்-ஏ சத்து, பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமலும் தடுக்கிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed