சுவிஸ் கராத்தே சம்மேளனத்தினால் நேற்றைய தினம் சனிக்கிழமை (19.03.2022) தேசிய ரீதியிலான கராத்தே நடுவர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது.
இச் செயலமர்வில் ஒர் பகுதியாக இடம்பெற்ற நடுவர்களுக்கான தகுதிகாண் பரீட்சையில் ஈழத்தமிழ் இளையோர்கள் மூவர் சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ நடுவர்களாக (Kumite Referee) சித்தியடைந்துள்ளனர்.
சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாம் தலைவர் Piero Lüthold அவர்கள் அவர்களது பெறுபேற்றினை மகிழ்வுடன் குறிப்பிட்டுப் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
என்னையும், எமது இனத்தையும் பெருமைப்படுத்தியுள்ள சென்செய் ஷ்வப்தேஷ், செம்பாய் ஆர்த்திகன் Artthikan Murali , செம்பாய் மிதுரன் Mithuran Murali அவர்களுக்கு எமது பெருமைமிகு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முகநூலில் Gowridhasan Vibulananthan என்ற நபர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.
மேலும், இவர்கள் மூவரும் எனது மாணவர்கள் என்பதுடன், ஜப்பான் கராத்தே தோ இதோசுகாய், சுவிற்ஸர்லாந்துக் கிளையில் மிக முக்கிய பொறுப்புக்களில் பதவி வகிப்பவர்கள். சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆர்வத்துடன் கராத்தேக் கலையினைத் தொடர்ந்து கற்று வருகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.