• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவு பகுதியில் விபத்தில் ஒருவர் பலி; 22 பேர் காயம்

März 20, 2022

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தை , பின்னால் சென்ற தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பஸ்ஸில் 23 பேர் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் அறியமுடிகிறது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed