• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி.

Mrz 19, 2022

கடந்த வாரம் சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்களில் ஒருவர், தனது படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று அதிகாலை 3.45 மணிக்கு, ஒன்ராறியோவின் நெடுஞ்சாலை 401இல், வேன் ஒன்றில் எட்டு பேர் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த வேன் மீது ட்ராக்டர் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில், Mohit Chauhan (23), Harpreet Singh (24), Jaspinder Singh (21), Karanpal Singh (22) மற்றும் Pawan Kumar (22) ஆகிய ஐந்து பேர் பலியாக, இரண்டு பேர் படுகாயமடைந்தார்கள்.

இந்நிலையில், Mohit Chauhan குறித்த துயர செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மொன்றியலிலுள்ள கல்லூரி ஒன்றில் வணிக மேலாண்மையில் பட்டயப்படிப்பு படித்துவந்த Mohit, தனது படிப்பை முடிப்பதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில்தான், சாலை விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கடின உழைப்பாளியான Mohit உட்பட உயிரிழந்த அனைவருமே Brampton பகுதியில் தங்கியிருந்திருக்கிறார்கள். அங்கு இந்தியர்கள் அதிகம் வாழ்வதாலும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதாலும் அங்கு தங்கியிருந்துள்ளார்கள் அவர்கள்.

புதன்கிழமை வரை Bramptonஇல் வேலை செய்துவிட்டு, மாலை தன் சக மாணவர்களுடன் கிரேட்டர் ரொரன்றோவுக்கு புறப்படுவாராம் Mohit. வியாழனும் வெள்ளியும் கல்லூரி, இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் மீண்டும் வேலைக்காக Bramptonக்கு வரவேண்டும்.

இப்படி வாரந்தோறும் பயணம் செய்யவேண்டியிருப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் மலிவான போக்குவரத்து அந்த வேன்தான். ஷேர் ஆட்டோ போல அந்த வேனில் பயணிக்கும்போதுதான், திடீரென வேன் பழுதாகி நிற்க, ட்ராக்டர் ட்ரெய்லர் ஒன்று அதன் மீது மோத, Mohit உடபட ஐந்து பேர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed