• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாசாவில் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு

Mrz 18, 2022

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.

கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில்யாழ்ப்பாணம் – குப்பிளான் மண்ணின் பெருமையும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது உலகத்தமிழர்களின் பெருமையும் அமெரிக்க நாசா விண்வெளியில் பணியாற்றி  பெருமை சேர்த்த  ஈழத்தமிழ் விஞ்ஞானிக்கு   பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed