• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மூன்று இளைஞர்கள் கைது

Mrz. 15, 2022

யாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைதான சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லிகிராம், மற்றும் 50 மில்லிகிராம் அளவுடய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேகநபர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed