• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூச்சாண்டி காட்டிய அமெரிக்கா! இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு

März 15, 2022

ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பல்வேறு புதிய வழிகளை பின்பற்றும் என்று தகவல்கள் வருகின்றன.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சர்வதேச பண பரிவர்த்தனைக்கான மெசேஜிங் சிஸ்டத்தில் இருந்து ரஷ்யா ஒரு பக்கம் நீக்கப்பட்டு விட்டது.

இதனால் சர்வதேச நாடுகளுடன் ரஷ்ய வர்த்தகம் செய்ய முடியவில்லை. அதேபோல் ரஷ்ய வங்கிகள் பல சர்வதேச அளவில் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் ரஷ்யா வங்கிகளில் இருந்து டாலர் அடிப்படையில் பரிவர்த்தனைகளை செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

 இதனால் 1 டாலருக்கு நிகரான ரஷ்யா பணமாக ruble மதிப்பு 131 ஆக சரிந்துள்ளது. ரஷ்யா மிக மோசமான பொருளாதார தடைகளை எதிர்கொண்டு உள்ள நிலையில் இந்தியாவிற்கும் இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவுடன் இந்தியா பொருளாதார ரீதியாக பல்வேறு வர்த்தகங்களை மேற்கொள்ள முடியவில்லை. அதேபோல் ரஷ்ய வங்கிகள் மீதான தடை காரணமாக 500 மில்லியன் டாலர் வரை ரஷ்ய வங்கிகளில் முடங்கி உள்ளது.

து இந்திய நிறுவனங்களின் பணம் ஆகும், இப்படி தடை இருக்கும் நிலையில்தான் இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பல்வேறு புதிய வழிகளை பின்பற்றும் என்று தகவல்கள் வருகின்றன.

இது தொடர்பாக வங்கிகளுடனும், பொருளாதார அமைப்புகளுடனும் மத்திய அரசு சார்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் என்டிடிவி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக ஆர்பிஐ, அல்லது வேறு வங்கி அமைப்புகள் இதில் அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை.

அரசு வட்டாரத்தில் பெயர் வெளியிட விரும்பாத சிலர் தெரிவித்த தகவல்கள் இவை என்று என்டிடிவி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவுடன் இந்தியா ரூபாய் – ருபில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள். அதாவது டாலருக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளப்படலாம் என்கிறார்கள்.

வங்கிகள் அமெரிக்கா மூலம் ரஷ்யாவில் முடக்கப்பட்டுள்ளதால் டாலரில் வர்த்தகம் மேற்கொள்ள சிக்கல் உள்ளது. இதனால் ரூபாய் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்திய தரப்பு முயன்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed