• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜேர்மனியில் ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வரும் கொரோனா விதி

Mrz 13, 2022

ஜேர்மனியில் கல்வி அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றில், பள்ளிகளில் மாணவமாணவிகள் மாஸ்க் அணிவதையும், ஒரே நேரத்தில் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்வதையும் முடிவுக்குக் கொண்டுவருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஏப்ரல் 2 முதல் பள்ளிகளில் மாணவமாணவிகள் மாஸ்க் அணியவேண்டியதில்லை.

அத்துடன், பள்ளிகளில், மாணவமாணவியருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அனைவருக்கும் மொத்தமாக கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடைமுறை ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையும் மே மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது.

இதற்கிடையில், பள்ளிகளில் மாஸ்க் அணிதல் முதலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், ஜேர்மனி கொரோனா தொடர்பில் நெருக்கடியான சூழலில் இருப்பதாக ஜேர்மன் பெடரல் சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed