• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காங்கோ நாட்டில் சரக்கு தொடருந்து தடம் புரண்டு 60 பேர் உயிரிழப்பு !

Mrz 13, 2022

சரக்கு ரெயிலில் சட்ட விரோதமாக பயணம் செய்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில்,  போதிய பயணிகள் தொடருந்து  சேவை இல்லாமல் மக்கள் சரக்கு தொடருந்துகளில் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. 

அந்நாட்டின் லூயன் மாகாணத்தில் இருந்து டென்கி நகருக்கு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.  இதில் 100-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக பயணம் மேற்கொண்டிருந்தனர்.

காங்கோவின் தெற்கில் உள்ள லுவாலாபா மாகாணத்தில் கிடென்டா மற்றும் பையோஃப்வே கிராமங்களுக்கு இடையே அந்த ரயில் சென்ற போது தடம் புரண்டது. 

பள்ளத்தாக்கு பகுதியில் சென்ற போது தண்டவாளத்தை விட்டு சாய்வாகச் சென்று தொடருந்து விபத்துக்குள்ளானதாக உள்ளூர் நிர்வாகி க்ளெமென்டைன் லுடாண்டா தெரிவித்தார். இதில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் ரெயில் பெட்டி இடிபாடுகளில் கிடந்த உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed