• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பங்குனி திங்களில் ஆலயம் செல்லவிருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

März 12, 2022

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் பங்குனி திங்கள் பொங்கல் விழா நடைபெறும் கோவில்களில் 3 தடுப்பூசிகளையும் பெற்ற பக்தர்கள் மட்டும் கலந்துகொள்ளவேண்டும் என தென்மராட்சி சுகாதார பிரிவினர் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவித்திருக்கின்றனர்.

எனவே அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறும் கோவில் நிர்வாகிகளுக்கு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கமைய கோவில் வாயிலில் கடமையிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 3 தடுப்பூசிகளையும் ஏற்றிய தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பக்தர்களை மட்டும் உள்ளே செல்வதற்கு அனுமதிப்பார்கள்.

அதேவேளை பரிசோதனையில் 3 தடுப்பூசிகளையும் செலுத்தாத பக்தர்கள் கோவிலுக்கு உள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed