• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் மாயம்!

Mrz. 8, 2022

இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன் கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (07) மாலை காணாமல் போன குழந்தை தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed