மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு 2,000 யூரோ பரிசு வழங்கப்படும் என இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
லாசியோ இத்தாலியின் 2வது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதி. இத்தாலியின் தலைநகரம் ரோம், லாசியோ பகுதியில் அமைந்துள்ளது. கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வணிகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இத்தாலிய அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ‘சின்சியர்லி ஃப்ரம் லாசியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் லாசியோ பகுதியில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 2,000 யூரோக்கள் வழங்குவதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதற்கு ஜனவரி 31, 2023 வரை அல்லது இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முடியும் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.