ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே உக்ரைனில் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானிடம் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைனை வான், கடல்,நிலம் என அனைத்து வழிகளிலும் ரஷ்யா தாக்கி வருகிறது. இதனை சிறப்பு இராணுவ நடவடிக்கை என புடின் கூறுகிறார். மேலும் நாட்டை நாஜிக்கள் அற்ற நாடாக மாற்ற இது தேவை என எந்த ஆதாரமும் இல்லையெ அவர் குறிப்பிட்டார்.
அதேபோல ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் படையெடுப்பு திட்டமிட்டது போல நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் மேற்கத்தய நாடுகளின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரஷ்ய படைகள் எதிர்பார்த்தது போல முன்னேறி செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல பேச்சுவார்த்தைக்கு வந்த உக்ரைன் பிரதிநிதிகள் மேலும் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என புடின் தெரிவித்ததாக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.